கண்டியில் அமைச்சர்கள் வீட்டுக்கு சாணக்கியன் செல்வது ஏன்..!
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கண்டியில் அமைச்சர்கள் வீட்டுக்கு செல்வது ஏன் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகபேச்சாளர் க.சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பாக மாறி வடக்கு - கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், 1250 வாக்குகளை பெற்ற கட்சி எங்கே, 90,000இக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற தமிழரசு கட்சி எங்கே என்னும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடக செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தமிழரசு கட்சியானது, ஜனநாயக அடிப்படையிலேயே போட்டியிடுகின்றது. எனவே குறித்த கட்சியை நாங்கள் கண்டு கொள்வதில்லை என்னும் வகையிலும் சாணக்கியன் குறித்த செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில், " சாணக்கியன், தமிழ் தேசிய முன்னணியின் வரலாறு தெரியாமல் பேசுகின்றார். கடந்த தேர்தலில் அரசியல் விபத்து ஒன்று நடந்தது.
தமிழ் மக்கள் அறியாமையினாலும், அநுர ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற ஒரு மாயையினாலும் ஜேவிபி தலைமையிலான என்பிபிக்கு வாக்களித்த காரணத்தினால் தமிழர் தாயகத்தில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கம் வந்தது - 40 வருடமாக லொட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
