6 மாதங்களுக்கு முன்பு எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்றும் பதிலில்லை - சாணக்கியன்!
நாடாளுமன்றத்தில் தான் 6 மாதங்களுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"நாடாளுமன்றத்தில் உள்ள இந்த கேள்வி பதில் முறையை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில், இந்த கேள்வியை நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி ஒருசில வாரங்களிலேயே இந்த கேள்வியை வழங்கி இருந்தேன்.
அந்த கேள்வி இவ்வாறு ஆறு ஏழு மாதங்களுக்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீங்கள் சிலவேளை அதற்கான வேலைகளை ஆரம்பித்து இருக்கலாம்.
அந்த வேலைத்திட்டம் உலக வங்கியின் நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியும். எனது முதலாவது கேள்வி, எமது கௌரவ அமைச்சரவை அமைச்சர் மட்டக்களப்பில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி வருகை தந்திருந்தபோது வீதிகள் தொடர்பான பல முறைபாடுகளை நாம் அவரிடம் முன்வைத்திருந்தோம்.
எமது மாவட்டத்தில் உள்ள பல வீதிகள் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானவை. சில, பிரதேச சபைக்கு சொந்தமானவை” என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




