ஜனாதிபதி வேண்டுகோளுக்கிணங்க பதவி விலகிய ஷம்மி சில்வா - வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் நேற்றைய தினம்(28) பதவி விலகியுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று(29) வெளியாகியுள்ளது.
இதன்மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஷம்மி சில்வாவின் ஏழு ஆண்டு கால நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஷம்மி சில்வா பதவி விலகக்கூடும் என்று ஏற்கனவே பேசப்பட்ட நிலையில், இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க பதவி விலகல்
இந்த பதவி விலகலை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்காலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வா, அவரது நிர்வாகத்தின் கீழ் அண்மைக் காலங்களில் சில கடுமையான சீர்திருத்தங்கள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க பதவி விலகியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.