முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு : கைதான ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியல்
முல்லைத்தீவில் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த 24.12.2021 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வரை இன்று வரை 04.01.2022 விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்ற
உத்தரவிட்டுள்ளது.





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
