முல்லைத்தீவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 அகவையுடைய இளைஞன் ஒருவர் இன்று இரண்டு சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்துள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமையக் குறித்த இளைஞனை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் விடயமாகக் காணப்படுகின்றது.
எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை
நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri