தீவிர பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்குகள்
பதாள உலகக்குழுவின் தலைவன் கணேமுல்ல சஞ்சீவாவின் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளன.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சஞ்சீவாவை சுட்டுக் கொலை செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டனர்.
செவ்வந்தியின் தாயார்
எனினும், கடந்த 11ஆம் திகதியன்று, சந்தேக நபரான செவ்வந்தியின் தாயார் சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் உயிரிழந்த சந்தேக நபரின் உடல், கட்டுவெல்லேகமவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மற்றும் இன்றும் கடுமையான பொலிஸ் மற்றும் உளவுத்துறையினர் பாதுகாப்பிற்கான நிறுத்தப்பட்டுள்ளனர்.
சடலம் அடக்கம் செய்யப்படும் இடம், வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
