செவ்வந்தி காலில் விழுந்து வணங்கிய அந்த பெண் யார்..!
வெளிப்பண்ணையில் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்லும் போது செவ்வந்தி தனது காலில் விழுந்து வணங்கி வெளியேறி சென்றதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். கணேமுல்ல சன்ஜீவ கொலை செய்த அன்றே இஷாரா செவ்வந்தி அளுத்கம வந்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவினருக்கு அநுர அரசாங்கத்தின் தண்டனை! அரசியல்வாதிகளுக்கும் ஆபத்து
செவ்வந்தியை தங்க வைத்து
அளுத்கம பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை எனது மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் ஏற்றிக் கொண்டு வெளிப்பண்ணையிலுள்ள ஒலிபோன் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் தங்கி வைத்திருந்தேன் என்றார்.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான 'மத்துகம சான்'எனக்கு நீண்ட காலம் நன்கு தெரியும்.
அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து, அளுத்கம பேருந்து நிலையத்தில் வந்திருக்கும் பெண்ணை நான் குறிப்பிடும் வரை தங்க வைக்குமாறு தெரிவித்தார்.அதன் பிரகாரம் செவ்வந்தியை தங்க வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் நேற்று நாரேண்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.இவர் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பாளராக வேலை செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri