கோவிட் தொற்றின் தீவிரம்! மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் விசேட நடவடிக்கை
நடைமுறை கோவிட் பரவலைக் கருத்தில் கொண்டு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மருந்துகளை தேவையானோருக்கு வீடுகளுக்கே விநியோகிக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன இதனை அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் கொழும்பு, கம்பஹா,கண்டி, பேராதெனிய, மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் ஆலம்பக் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக குறித்த பிரதேசங்களில உள்ளவர்களுக்காக தொலைப்பேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு 1 முதல் 4 வரையான பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 7 இல் வசிப்போர் 070 1902740 அல்லது 070 1902741 அல்லது 070 1902742 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் வசிப்பவர்கள் 070 1902773 என்ற இலக்கங்களுடனும் கண்டியில்
வசிப்போர் 070 1992737 என்ற இலக்கங்களுடனும் பேராதெனியவில் வசிப்போர் 070
1902739 என்ற இலக்கங்களுடனும் குருநாகலில் வசிப்போர் 070 1718318 என்ற
இலக்கங்களுடனும் தொடர்பு கொண்டு தமமக்கான மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
