தென்னாபிரிக்காவில் கடும் வெள்ளம்: மாணவர்கள் உட்பட பலர் பலி
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெள்ளத்தினால், பாடசாலை பேருந்து ஒன்று இழுத்து செல்லப்பட்டதில் உயிரிழந்த மாணவர்களும் அடங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருவதால் மழை மற்றும் பனி காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு கேப்பில் பகுதியில் இருந்து வெள்ளத்தினால், பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாகாண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நேற்று டெகோலிக்னி என்ற கிராமத்தில் பாடசாலை செல்லும் வழியில் ஒரு பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பேருந்தில், மாணவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் உட்பட 13 பேர் சம்பவ நேரம் பயணித்ததாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேடப்படும் உடல்கள்
துரதிஸ்டவசமாக அந்த மாணவர்களில் நான்கு பேரும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நான்கு பேரை காணவில்லை, மீட்புக் குழுக்கள் இன்னும் உடல்களைத் தேடி வருகிறது.
முன்னதாக 2022ஆம் ஆண்டில், தென்னாபிரிக்காவின் டேர்பன் மற்றும் குவாசுலு - நடால் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
