வவுனியா வடக்கில் கடும் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு
வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை தொடர்பில் இன்று (16.08.2023) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குடிநீர் வழங்கும் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்தகல் கிராமத்தில் 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுவதனால் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது.
விரைவில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



