வறட்சியால் வற்றும் சேனாவெளி குளம் – நீரின்றி தவிக்கும் தம்பலகாமம்
தொடர்ச்சியாக நிலவும் கடும் வறட்சி மற்றும் எல்நினோ காலநிலை தாக்கத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சேனாவெளி குளம் நீர் மட்டத்தின் அளவு வற்றி வரண்டு காணப்படுகின்றது.
நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குளத்தின் பெரும்பகுதி தற்போது வறண்ட நிலையில் காணப்படுவதுடன், இதனை நம்பியுள்ள விவசாய நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்நினோ காலநிலை
குறிப்பாக, குளத்தின் நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கான மாற்று நீர்வழங்கல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான வெப்பநிலையும் நிலவுவதுடன் நெற் செய்கை விவசாயத்தை நம்பியே குறித்த குளத்தை அண்டிய விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறாக எதிர்வரும் மாதங்களில் எல்நினோவின் தாக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7