உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் - தேசபந்து தென்னக்கோன் அதிரடி
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இடமாற்றம்
அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கல்கிசை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ்எஸ்பி இ.எம்.எம்.எஸ். தெகிதெனிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
