இஸ்ரேலிய படையினர் கட்டாரில் திடீர் தாக்குதல்
இஸ்ரேலிய படையினர் கட்டாரில் திடீர் தாக்குதல் நடத்தியதாக கத்தார் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
கட்டாரில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் இராணுவ வானொலி தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திடீர் தாக்குதல்
காஸா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹமாஸ் பிரதிநிதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மற்றுமொரு முன்னணி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டாரின் தலைநகர் தோஹாவில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் ஹமாஸ் காசா தலைமைப் பொறுப்பாளர் கலீல் அல்-ஹய்யா உட்பட முக்கிய தலைவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகர் தோஹாவின் கட்டாரா பகுதியின் மீது புகை எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த தாக்குதல்களை மோசமான குற்றம் என கத்தார் அரசாங்கம் கண்டித்துள்ளது. சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினரின் இந்த நவடடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்கான பதிலடி கொடுக்கப்படும் எனவும் கத்தார் தெரிவித்துள்ளது.
மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அண்மையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கததார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை கண்மூடித்தனமாக மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதகாவும் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கட்டார் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
