மறைத்து வைக்கப்பட்டிருந்த பல அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டன (Photo)
நுகர்வோர் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
இதையடுத்துச் சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி தெரிவித்துள்ளமையுமு் குறிப்பிடத்தக்கது.



