டயகமவில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட பலர் கைது
டயகம பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காகப் பசு மாட்டைக் கடத்திய மூவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கே இறைச்சிக்காக மாடு இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் டயகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய டயகம எல்லைக்குள்ளேயே மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.
பசு மாடு மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, டயகம பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், 325 லீற்றர் கோடாவும், கசிப்பு
தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.



மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
