ஏழு வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு
ரத்கம பிரதேசத்தில் ஏழு வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த குற்றச்செயலோடு தொடர்புடைய சந்தேக நபர் ரத்கம கம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமானவர் எனவும், மாணவியின் உறவினர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வெளிநாட்டில் உள்ளார் எனவும் தற்போது பாட்டியின் பாதுகாப்பிலே வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாதிப்புக்குள்ளான மாணவி வீட்டில் இருந்த போது அவரது பாட்டி பூ பறிக்க சென்றதாகவும், அந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி மருத்துவ பரிசோதனைக்காக இன்று (11.07.2023) காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |