ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யகூடாது! - சுப்பிரமணியன் சுவாமி எடுத்துள்ள நடவடிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட காலமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யக்கூடாது என பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
[R17O18 ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று தான் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி மட்டுமல்லாது இந்த தாக்குதலில் 18 பொலிசார் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில், ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே, குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.