மிளகாய்தூள் என இரசாயனத்தை சுவைத்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
தம்புள்ள பிரதேசத்தில் ஆய்வுகூட இரசாயனத்தை சுவைத்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ள ரத்மலகஹஎல கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 7ல் கற்கும் ஏழு மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வுகூடத்தில் கீழே சிதறிக் கிடந்த இரசாயன பொருள் ஒன்றை மாணவர்கள் சுவைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் இரண்டு மாணவிகளும் ஐந்து மாணவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பாடசாலை விடுமுறை நாட்களில் குரங்குகள் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் நுழைந்து பொருட்களை வீசி எறிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கீழே கொட்டிக் கிடந்த சிகப்பு நிற தூள் போன்ற பொருளை மாணவர்கள் மிளகாய்தூள் என சுவைத்துப் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இநதனால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
