நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி பலர் பலி!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போகமுவ தெதுரு ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற ஒன்பது மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் அவர்களுடைய தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு சம்பவங்கள்
இதேவேளை மாரவில - குருசா தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் இத்தேபான - மேல் கந்தயகிரல பிரதேசத்தில் உள்ள அதவெதுன்வெவ நீர் குளியலில் குளிப்பதற்கு சென்ற இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
