வசந்த முதலிகே தொடர்பில் ஏழு மனித உரிமை அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கை
2022 ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர் வசந்த
முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த
வேண்டும் என ஏழு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
29 வயதான முதலிகே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசாங்கம் நீண்டகாலமாக நீக்குவதாக உறுதியளித்த ஒரு கொடூரமான சட்டமாகும் என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
சட்டமா அதிபர் திணைக்களம்
முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, 2023 ஜனவரி 17ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படும் சட்டமா அதிபர் திணைக்களம் அதை எதிர்த்ததால் நீதிமன்றம் பிணையை அனுமதிக்கவில்லை.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, ஆட்சி சீர்திருத்தம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும்பாலும் அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
எனினும் அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்கியதன் மூலம் பதிலடி கொடுத்தது.
அத்துடன் பல மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை கைது செய்யவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பயங்கரவாதத்தில் தொடர்பு குறித்து எந்த ஆதாரத்தையும் முன்வைக்காத நிலையில், அதிகாரிகள் முதலிகேவை காவலில் வைக்க அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போதைய நிர்வாகம் உட்பட அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, உரிமைகளை மதிக்கும் சட்டத்தை கொண்டு வருவதற்கு பலமுறை உறுதியளித்துள்ளன, கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அரசாங்கம் இந்த உறுதியை வழங்கியது.
முதல் தடவையாக நீதிவான் முன் வசந்த முதலிகே
ஆகஸ்ட் 18ஆம் திகதி, கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அதிகாரிகள் முதலிகே மற்றும் 19 பேரை கைது செய்தனர்.
டிசம்பர் 14ஆம் திகதி, முதலிகே தடுத்து வைக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக நீதிவான் முன் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜனவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையின் போது முதலிகேவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் அல்லது பிணை வழங்குவதற்கு உடன்படுமாறும் சட்டமா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் 7 மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம்,சிவிகஸ்,முன்னணி பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம்,இலங்கை தொடர்பான சர்வதேச செயற்குழு மற்றும் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் என்பன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
