முல்லைத்தீவு- புலிபாய்ந்தகல்லில் சிங்களவர்களை குடியமர்த்த முயற்சி: ரவிகரன்

Mullaitivu Northern Province of Sri Lanka Sri lanka Tamil News
By Shan Aug 08, 2023 04:42 AM GMT
Report

முல்லைத்தீவு நாயற்றுபகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,

கடற் தொழிலாளர்கள் முறைப்பாடு

நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் குடியேறி இருக்கும் சிங்கள கடற்தொழிலாளர்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி கடல் தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட போவதாகவும், சிங்கள கடற்தொழிலாளர்களுக்கு தொழில் செய்வதற்கான வாடிகள் அமைக்கும் பொருட்கள் குறித்த கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் தமிழ் கடற்தொழிலாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- புலிபாய்ந்தகல்லில் சிங்களவர்களை குடியமர்த்த முயற்சி: ரவிகரன் | Settle Sinhalese Pulipaintha Kal Imullaitivu

குறித்த விடயம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டதுடன், மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது கடற்தொழிலாளர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக இங்கே வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்னர் இந்த இடங்களை பௌத்தப்பிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடல்

இதற்கமைய நேற்றைய தினம் (07.08.2023) முல்லைத்தீவு மாவட்ட கடற் தொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவு- புலிபாய்ந்தகல்லில் சிங்களவர்களை குடியமர்த்த முயற்சி: ரவிகரன் | Settle Sinhalese Pulipaintha Kal Imullaitivu

குறித்த கலந்துரையாடலின் போது, அவர் வெலிஓயாவில் இருக்கும் கடற் தொழிலாளர்கள் தாம் படகு மூலம் தொழில் செய்யப்போவதாகவும் நான்கு படகுகளுக்கு புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் அனுமதி தரும்படி கோரியுள்ளதாகவும், அத்தோடு குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் கடற்தொழில் அமைச்சில் டி.ஜி.ஐ. தாம் சந்திக்க செல்வதாகவும் வெலிஓயாவை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கமைய குறித்த விடயத்தினால் எமது கடற்றொழிலாளர்களுக்கான இடங்கள் போதாத நிலை பற்றியும் இவ்வாறு குடியேற்ற வாசிகள் என்று ஒவ்வொரு இடமாக கொடுத்துக் கொண்டு போனால் எமது கடற்றொழிலாளர்களின் நிலைமை என்ன என்பதையும் இப்படியான திணிப்பை எமது தமிழ் கடற்றொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் சுட்டி காட்டியதோடு வாடிகள் அமைப்பதற்கான அனுமதி என்பது பிரதேச செயலகத்தினாலேயே வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US