யாழில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா எச்சரிக்கை

Sri Lanka Army Jaffna Sri Lanka
By Theepan Nov 09, 2022 09:57 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருட் பாவனையையும் கடத்தலையும் தடுக்கும் நோக்குடன் பிரதான வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் நேற்றுமுன் தினம் (08.11.2022) தெரிவித்துள்ளார்.

 பொருளாதார நெருக்கடி

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்கைக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் போதாது என்ற ரீதியிலா இந்த நடவடிக்கை என்றே கேட்கத் தோன்றுகின்றது.

யாழில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா எச்சரிக்கை | Set Up To Curb Drug Use Checkpoints

உட்பட, தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவச் சோதனைச் சாவடிகள் என்பன, அநாவசியமான கெடுபிடிகளை ஏற்படுத்தி, உளவியல் ரீதியாக அச்சுறுத்தி நிற்கும், வெறுப்புக்குரிய ஓர் பொறிமுறையாகவே கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளன என்பதே அனுபவபூர்வமான உண்மையாகும்.

இந்த பின்னணியில், வடக்கின் ஆளுனர் இராணுவ சோதனைச் சாவடிகளை ஏன் பரிந்துரைத்துள்ளார் என்பது புதிராக உள்ளது. மிகவும் ஆட்சேபகரமான விடயமாக படைத்தரப்பினரால் தொடர்ந்து அணுகப்பட்டு வந்திருக்கும் மாவீரர் நினைவஞ்சலி வாரம் நெருங்கி வரும் சூழ்நிலையில், போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, நீறு பூத்த நெருப்பாக நீடிக்கும் தமிழ் மக்களின் நீண்டகால துயர நினைவுகளை உரசிப்பார்க்கும் ஓர் உளவியல் துன்புறுத்தலாக மட்டுமே அமைய முடியும் என்பதை தயக்கம் எதுவும் இன்றி சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

யாழில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா எச்சரிக்கை | Set Up To Curb Drug Use Checkpoints

சோதனைச் சாவடிகள்

இந்த சோதனைச் சாவடிகளில் சில சிற்றெறும்புகள் வேண்டுமானால் சிக்கலாம். ஆனால், சுண்டெலிகளும் பெருச்சாளிகளும் ஒருபோதும் மாட்டிக்கொள்ளப் போவதில்லை.

கடலிலே கடற்படையிடம் போதைவஸ்து மீன்கள் சிக்குவது போல, தரையில் நிகழப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில், அர்த்தமற்ற இந்த திட்டத்தை கைவிடுமாறு வடமாகாண ஆளுநரை நாம் கோருகின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்க முனையும் போதைப் பொருள் பிரச்சினைக்கு முடிவு கட்ட அறிவார்ந்த ரீதியில் ஆக்கபூர்வமான நடவடிக்ககைள் அவசரமாக எடுக்கப்படுவது அவசியமானது என்றும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

யாழில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா எச்சரிக்கை | Set Up To Curb Drug Use Checkpoints

சமூகத்தின் சகல தரப்பினரையும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் உத்வேகத்தோடு ஈடுபடுத்தும் திட்டமொன்று தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும்.

சமூகத்துறை, நிர்வாகத்துறை, பொலிஸ் துறை உட்பட படைத்தரப்பு மற்றும் சட்டத்துறை, நீதித்துறையோடு, சமயத்துறையையும் உள்ளடக்கிய ஓர் பரந்த திட்டம் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே, சமூகத்தின் சகல பிரிவினரின் பூரண ஒத்துழைப்பை பெற்று இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

போதைப் பொருள் பாவனையில் சிக்கியுள்ள இளைய சந்ததியினரை மீட்டெடுப்பதில் உளவியல் ரீதியான செயற்பாடுகளும், பொருளாதார ஊக்குவிப்புடன் கூடிய கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளும் அவசியமானவை என்பதையும் நாம் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.

ஆக்கபூர்வமான நடவடிக்கைள்

இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவுவதிலும் ஊக்கம் அளிப்பதிலும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இறுதியாக போதைப்பொருள் வியாபாரத்தையும், பாவனையையும் முறியடிப்பதில் கசப்பானதோர் உண்மையை தரிசித்தே தீரவேண்டும். அதிகாரம் மிக்க பலரின் ஆதரவோடும் அனுசரணையோடும் தான் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கௌரவத்தோடு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே அந்த உண்மை.

அது மட்டுமன்றி இவர்களின் தென் இலங்கைத் தொடர்புகள் ஊடாகவே யாழ்ப்பாணம் இன்று மெல்ல மெல்ல நாசமாகிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னலும் கண்டறியப்பட்டு, ஏதோ ஒரு விதத்திலாவது சம்பந்தப்பட்டோர் மீது சட்டம் பாயாதவரையில், பிரச்சினைக்கு முடிவு கட்டுவது என்பது பெரும் போராட்டமாகவே தொடரும்.  

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US