புரவி புயலால் சேதமடைந்துள்ள இரணைத்தீவு இறங்குதுறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இறங்குதுறை கடந்த ஆண்டு ஏற்பட்ட புரவி புயலால் முற்று முழுதாக சேதமடைந்துள்ளமதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அதனை மீளவும் புனரமைத்துத் தருமாறு கடற்றொழிலாளர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைதீவு கடந்த 2018 இல் மீள்குடியேற்ற அனுமதிக்கப்பட்ட நிலையில், 2019 இல் அங்குள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இறங்குதுறையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இறங்குதுறை தரமற்ற கட்டுமானப்பணிகள் என பலர் சுட்டிக்காட்டிய போதும், அவை கவனத்தில் எடுக்காது அமைத்து முடிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2020 இல் ஏற்பட்ட புரவி புயலால் குறித்த இறங்குதுறை முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
இதனால் கடற்றொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் போக்குவரத்து, கடற்றொழில் சார்ந்து பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே தங்களது இறங்குதுறை மீளவும் புனரமைத்துத் தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பினர்களிடமும்
தெரிவித்துள்ளதாகவும் இரணைத்தீவு பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.









அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
