பிரதமரின் வீடு தீ வைப்பு சம்பவம்:மூன்று பேர் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி 5வது ஒழுங்கையில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெளியிடங்களை சேர்ந்த சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள் கல்கிஸ்சை, காலி மற்றும் ஜா-எல பிரதேசத்தை வசிப்பிடங்களாக கொண்டவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே அலரி மாளிகையில் தீயணைப்பு உபகரணம் ஒன்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தல்துவ கூறியுள்ளார்.
வீட்டில் இருந்த பழங்கால பொருட்கள் மற்றும் அரிய நூல்கள்
#Colombo #SriLanka protests ha had enough of government tyrant. Burned down house of #PrimeMinister #RanilWickremesinghe pic.twitter.com/X4dotR77f7
— AmyWeber Reports To PainfulSilence.com (@AWeberInvestiga) July 9, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்துடன் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்பில்லை எனக் கூறப்படுகிறது. போராட்டகாரர்களுடன் சம்பந்தப்படாத சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் பழங்கால பொருட்கள், நூலங்களில் கூட கிடைக்காத அரிய நூல்கள் இருந்துள்ளன.