எதிரணி உறுப்பினர்களுடன் மட்டும் நடந்த பூநகரி பிரதேச சபையின் அமர்வு: முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றம்
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் அமர்வைத் தனியே எதிரணி உறுப்பினர்களுடன் மட்டுமே நேற்று (25.01.2021) தவிசாளர் நடாத்தியுள்ளார்.
அத்தோடு இன்று நீண்டகாலமாக நிறைவேற்றப்படாதிருந்த முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று காலை மாதாந்த அமர்வு ஆரம்பமாகிய போது ஆளும் தரப்பு தமிழரசு கட்சியின் உப தவிசாளரும் பிறிதொரு உறுப்பினரும் விடுமுறை வழங்கியிருந்தனர்.
ஏனைய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எட்டு பேர் கொடுப்பனவுக்காக ஒப்பம் இட்டுவிட்டு சபையிலிருந்து வெளியேறிவி்ட்டனர்.
மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களுடன் கூட்டத்தை நடாத்த முடியும் என்ற சட்ட ஏற்பாட்டிற்கு அமைவாக 20 பேர் கொண்ட பூநகரி பிரதேச சபையில் தவிசாளர் சமத்துவக்கட்சியின் நான்கு உறுப்பினர்கள், ஈபிடிபியின் ஒரு உறுப்பினர், சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் சபை அமர்வை நடாத்தியுள்ளார்.
இதன் போது கடந்த காலத்தில் நிறைவேற்றப்படாது கிடப்பில் கிடந்த நான்கு முக்கிய விடயங்களையும் தவிசாளர் இன்று நிறைவேற்றியுள்ளார். அதாவது ஒன்று பூநகரி சந்தையில் வழங்கப்படாதிருந்த ஐந்து கடைகளை விண்ணப்பதாரிகளுக்கு வழங்கச் சபை அனுமதித்துள்ளது.
இரண்டாவது வறட்சி காலத்தில் நீர் விநியோகத்தில் ஈடுபட்ட சபையின் ஊழியர்களுக்குப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு ஊழியர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்படாது
இருந்து வந்த நிலையில் இன்று அதற்கான அனுமதி வழங்கியமை. மூன்றாவது முழங்காவில் சந்தை புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு அனுமதி வழங்கியமை.
நான்காவது முழங்காவில் சந்தையில் வாழ்வாதாரத்திற்காகக் கடைகளைப் பெற்று அதனை பிறிதொருவருக்கு வாடகைக்கு வழங்கிய ஐந்து கடைகளை வாடகைக்குப்பெற்று நடாத்தியவர்களுக்கே வழங்க அனுமதி போன்ற தீர்மானங்கள் சபையில் கலந்துகொண்டவர்களின் முழுமையான அனுமதியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய சபை அமர்வில் நிதிக் குழுவின் அறிக்கை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam