முல்லைத்தீவில் இழப்பீட்டிற்கான நடமாடும் சேவை (photo)
முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின்
நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (02.11.2022) துணுக்காய் பழைய பிரதேச செயலக வளாகத்தில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இழப்பீட்டுக்கான கொழும்பு அலுவலகத்தின் பணிப்பாளர், உதவி பணிப்பாளர் மற்றும் இழப்பீட்டு அலுவலர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் வருகை தந்திருந்தனர்.
இழப்பீட்டுக்கான கோரிக்கை
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதி மக்களுக்குரிய 280 இழப்பீட்டு கோரிக்கைக்கான கோவைகளும் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலிருந்து 4 கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மக்களுடைய இழப்பீட்டுக்கான கோரிக்கைகளும் கிடைக்கப்பெற்றிருந்தன.
இதன்போது இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம்.ஹசீம் அவர்கள்
கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இதற்காக விண்ணப்பித்த பலரது தொடர்பான இன்று இல்லாத நிலை காணப்படுகிறது. அவர்களிற்கு பல தடவைகள் கடித மற்றும் தொலைபேசி தொடர்புகள் மேற்கொண்டும் தொடர்புகள் கிடைக்கவில்லை. இதனால் இது நீடித்துக் கொண்டே செல்கிறது.
எனவே இவர்களுக்கான கொடுப்பனவுகளை இரு மாதங்களிற்குள் நிறைவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். எனவே நீங்கள் அறிந்தவர்களுக்கு இதனை எடுத்துக் கூறுங்கள். இதனூடாக குறித்த விண்ணப்பங்களை கொடுப்பனவுக்குரிய விண்ணப்பங்களை விரைவாக பிரதேச செயலர் ஊடாக உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.














16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
