சேருவில பிரதான வீதியில் பட்டா ரக வாகனத்துடன் வான் மோதி விபத்து: அறுவர் படுகாயம்
சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா ரக வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று (24.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
உறங்கிய சாரதி...
காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி 10 பேருடன் பயணித்த வான் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன்னால் வீதி ஓரமாக தரித்து நின்ற டிமோ பட்டா வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமுற்ற 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 1 ஆண் உள்ளிட்ட 6 பேர் சேருவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வானில் 2 குழந்தைகள் உட்பட 6 பெண்களும், 2 ஆண்களும் பயணம் செய்துள்ளனர்.
சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வற்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |