ஊடகவியலாளர் நிலாந்தன் மீது மீண்டும் தீவிர விசாரணை (Photos)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று ஏறாவூர் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரண்டு நாட்களாக ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டுக்குச் சென்ற ஏறாவூர் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் விசாரணை ஒன்று இருப்பதனால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன் படி இன்று (09) மதியம் 12 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான நிலாந்தனை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த யூலை மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்ட போது கேட்கப்பட்ட கேள்விகளைக் கேட்டே குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் எந்த எந்த ஊடகங்களில் பணியாற்றுகிறீர்கள்? நீங்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரா? நீங்கள் புணர்வாழ்வு பெற்றுள்ளீர்களா? உங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறதா?
காணாமல்போன அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளீர்களா? எத்தனை நீதிமன்ற வழக்குகள் உள்ளன? முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தயாமோகனுடன் தொடர்பு உண்டா? உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டு எழுதிக்கொண்டனர்.
ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை ஓ.ஐ.சி, நீங்கள் வெளிநாட்டு அமைப்புக்கள் முன்னாள் விடுதலைப் புலிகளுடன், டயஸ்போராவுடன் தொடர்பை வைக்க வேண்டாம்.
உங்களுக்கு டயஸ்போரவுடன் தொடர்வு இருப்பதாகவும் உங்களை விசாரணை செய்யச் சொல்லி நிறைய முறைப்பாடுகள் எங்களுக்குக் கொழும்பிலிருந்து வந்துள்ளது.
எல்.டி.டி எல்லாம் அழிஞ்சு போயிற்று, எனவே அந்த செயற்பாடெல்லாம் விட்டு விட்டுப்பேசாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தியேட்டர் மோகனை போல் வருடக் கணக்கில் உள்ளுக்குள் இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்து அனுப்பியதாக ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.




தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
