பொலிஸ் மாஅதிபருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் தீவிர விசாரணை
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான உத்தரவு, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி இந்த ஒன்பது மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்கள் மீதான விசாரணை
எவ்வாறாயினும், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்,இந்த மனுக்கள் பராமரிக்கப்படுவதை சவாலுக்குட்படுத்தி ஆட்சேபனைகளை எழுப்பியதுடன், இந்த மனுக்களை வரம்புக்குள் தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்

இந்த மனுக்கள் மீதான விசாரணை பல நாட்கள் தொடர்ந்த நிலையில், அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்றம் மனுக்களை நேற்றிரவு இரவு 8:50 மணிவரை விசாரணை செய்தது.
நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri