நாட்டில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நிலை! பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தகவல்
ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தின் போது எந்தவித அடையாளமும் வெளிப்படுத்தாது வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாரதூரமான அளவில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை வெளிப்படுத்துவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சுகாதார பணியகத்தின் அவதானிப்புகள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவலின் அதிகரிப்பு தன்மையொன்றே காணப்படுகின்றது. தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் 800 இற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 நாட்களில் 15 ஆயிரத்து 197 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரகாலத்தில் நாட்டில் மீண்டும் கோவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுகின்றது.
இது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
