இலங்கையின் 10 புதிய தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு (Photos)
இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட 10 நாடுகளின் தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (07.11.2023) இடம்பெற்றுள்ளது.
கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு, கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
