தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 350ஐயும் நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்: செந்தில் தொண்டமான் உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் விரைவில் 350 ரூபா கொடுப்பனவையும் பெற்றுக்கொடுப்போம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு களுத்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“1350 ரூபா சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது. விரைவில் 350 ரூபா கொடுப்பனவையும் பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுகளையும் மேற்கொள்ளவுள்ளது.
முழுமையான ஒத்துழைப்பு
அதனை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்கள் எஞ்சியுள்ள 350 ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முற்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவுள்ளது.

அதனை விமர்சிப்பவர்கள் பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காக்கும் பட்சத்தில் அதனை நாம் பெற்றுக்கொடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam