முதலாளிமார் சம்மேளத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள செந்தில் தொண்டமான்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட போதிலும், தோட்டங்களில் கைகாசுக்கு வேலை செய்பவர்களுக்கு கடந்த 1 மாதம் காலமாக 1000 ரூபாய் நிராகரிக்கப்பட்டு, 700 ரூபாய் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டு வந்துள்ளதாக செந்தில் தொண்டமானுக்கு பல மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்திற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வ கடிதமொன்றை இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் கைகாசுக்கு வேலை செய்பவர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படாமையை உறுதிப்படுத்துவதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொழிலாளர் திணைக்களத்தில் (Labour Department) ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதமாக முன்னெடுக்கப்பட்ட விடாமுயற்சியின் பிரகாரம் அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் சம்பளம் கை காசுக்கு வேலை செய்பவர்களுக்கும் சேர்த்தே உள்ளடக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
