செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்: தமிழக ஆளுநரின் உத்தரவு
தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை ஆளுநா் மேற்கொண்டுள்ளாா்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடா்வாா் என தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த ஆணையை மீறி இந்த உத்தரவை ஆளுநா் பிறப்பித்துள்ளாா்.
இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சா் வி.செந்தில் பாலாஜி கடுமையான குற்றத்தை எதிா்கொண்டுள்ளாா். வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியது, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் அவா் மீது உள்ளன.
பதவி துஷ்பிரயோகம்
மேலும், அவா் அமைச்சா் பதவியை துஷ்பிரயோகம் செய்து, இந்த வழக்கு விசாரணையில் தனது செல்வாக்கைச் செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறாா்.
தற்போது அமலாக்கத் துறை விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளாா். அவா் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழக அமைச்சரவையில் வி.செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பாதிக்கும், இது மாநிலத்தில் அரசியலமைப்பு நடைமுறையைச் சீா்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.
இந்தச்சூழ்நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி வி.செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
