நிதி நிறுவன சட்ட மீறல்: சக்விதி ரணசிங்க தம்பதியினருக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை
நிதி நிறுவன சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில், ஒரு தம்பதியினர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சக்விதி ரணசிங்க என்றும் அழைக்கப்படும் சந்தன வீரகுமார மற்றும் அவரது மனைவி குமாரி அனுராதனி ஆகியோரே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபந்திகே இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.
வைப்புத்தொகை
2006 நவம்பர் 1, முதல் 2008 செப்டெம்பர் 11ஆம் திகதி வரை நுகேகொட பகுதியில் ஒரு நிறுவனத்தை உரிய பதிவின்றி நடத்தியதாக, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 1.6 பில்லியன் வைப்புத்தொகையைப் பெற்று, முறையான அங்கீகாரம் இல்லாமல், குறித்த வைப்புத்தொகையின் அடிப்படையில் இந்த தம்பதியினர் வருமானத்தை வழங்கியமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா ஒரு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
அத்துடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
