பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பேராசிரியர் பதவி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் படி, பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பௌதிகவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 15 மணி நேரம் முன்

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
