சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் மூத்த தலைவரின் கருத்து
கிழக்கில் உள்ள இந்தியர்கள் சீனர்களைப் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சேம் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட காங்கிரஸின் சர்வதேச தலைவரான சேம் பிட்ரோடா, இந்தியாவைப் போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தென்னிந்தியாவில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள்.
பரம்பரை சொத்துக்கான வரி
அத்துடன் மக்கள் பல்வேறு மொழிகள் பழக்கவழங்கங்கள் மற்றும் உணவுகளை மதிக்கின்றனர் இந்தநிலையில் அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியாவை பன்முக நாடாக வைத்திருக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் திசைகளை கோடிட்டு இந்தியர்களை வேறு நாட்டவர்களுக்கு ஒப்பிட்டமையை ஆளும் பாரதீய ஜனதா கண்டித்துள்ளது.
அதேநேரம் அவரின் கருத்து தமது கட்சியின் நிலைப்பாடல்ல என்று காங்கிரஸின் செயலாளர் ஜெய்ராம் ரமேஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் இன்னும் நடைமுறையில் இருக்கும் பரம்பரை சொத்துக்கான வரியை இந்தியாவிலும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று பிட்டோரா கூறியிருந்தமையும் சர்ச்சையாக கருதி விமர்ச்சிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |