ட்ரம்ப் ஆதரவாளர்களால் அதிர்ந்த செனட்! - இப்படிக்கு உலகம்
அமெரிக்காவில் ஜோ பைடனுக்கான தேர்தலுக்கு சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்பு கலவரமாக மாறிய போராட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னல்களை நொறுக்கி, அங்கிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை தாக்க முயன்றுள்ளனர்
கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ஈடுபட்ட நிலையில் பல ஆயிரக்கணக்கான தேசிய காவல்படையினர், எஃப்.பி.ஐ ஏஜெண்டுகள் மற்றும் அமெரிக்க இரகசிய சேவை ஆகியோர் பொலிஸாருக்கு உதவியுள்ளனர்.
இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,