போதைபொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது, இன்று (11.09.2024) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்பெற்ற இந்த நிகழ்வினை கந்தளாய் நீதிமன்ற சமுதாயம் சார் சீர்திருத்த பிரிவு மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
தெளிவூட்டல்கள்
இதன்போது, போதைபொருள் பாவனைக்குட்பட்டு நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்ட தவறாளர்கள்களுக்கு (கட்டளையாளர்கள்) மௌலவிகளால் மத ரீதியாக விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளது.
மேலும், போதைபொருள் பாவனை ஊடாக ஏற்படும் பாதக விளைவுகள், குடும்ப வன்முறைகள் தொடர்பிலும் உளவள ஆலோசனை தொடர்பிலான தெளிவூட்டல்கள் தொடர்பிலும் பெண்கள் அபிவிருத்தி உதவியாளரும் உளவளத் துணை ஆலோசகருமான நஸ்ரின் திலானி தெளிவிபடுத்தியுள்ளார்.
அதேவேளை, இஸ்லாம் மார்க்கம் சொல்லும் விடயங்களை மத ரீதியான தெளிவுபடுத்தல்கள் மூலம் மௌலவி ஒருவர் உரையாற்றினார்.
மேலும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் பி.ஹம்சபாலன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |