இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் தடை
இலங்கையில் அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மாத்திற்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்காக வழங்கப்பட்ட அரை சொகுசு பஸ் சேவை அனுமதிப்பத்திரத்தை இன்றிலிருந்து வேறு சேவைக்காக மாற்றியமைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பேருந்து கட்டண திருத்தம்
இதேவேளை, பேருந்து கட்டண திருத்தத்தின் தேசிய கொள்கையின் பிரகாரம் இன்றைய தினம் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
எனினும் இந்த வருடம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
