புத்தாண்டுக்கு பிறகு அரை சொகுசு பேருந்துகள் இருக்காது
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின் அரை சொகுசு பேருந்து சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொது போக்குவரத்து சேவை பேருந்துகள் சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு வகைகளின் கீழ் இயங்குகின்றன.
அறவிடப்படும் கட்டணம்
அரை சொகுசு பேருந்துகளில் சாதாரண கட்டணத்தை விட அரைப்பங்கு அதிக கட்டணமும், சொகுசு பேருந்துகளில் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணமும் அறவிடப்படுகிறது.
அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
அப்படி இருந்தும், அரை சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பயணிகளுக்கு பயனளிக்காத அரை சொகுசு சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அரை சொகுசுப் பேருந்துகள்
அத்துடன், தற்போது அரை சொகுசுப் பேருந்துகளாக இயங்கும் பேருந்துகளை குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக அல்லது வழக்கமான சேவைகளாக மாற்றுமாறு பேருந்து சங்கங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையினால் இயக்கப்படும் 4,300 பேருந்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நீண்ட தூர சேவைப் பேருந்துகளாகும்.
இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே அரை சொகுசு சேவைகளாக இயக்கப்பட்டன.
அந்தப் பேருந்துகளும் அந்தப் பிரிவில் இருந்து அகற்றப்படும் என இலங்கை பயணச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) பண்டுக ஸ்வரனஹன்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
