சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 20-20க்கான அரையிறுதி வரிசை
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 20க்கு 20 தொடரின், அரையிறுதி வரிசை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும், அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில், முதல் அரையிறுதிப் போட்டி இடம்பெறுகிறது.
அரையிறுதிப் போட்டி
ராய்ப்பூரில் இந்த போட்டி இடம்பெறுகிறது. இதேவேளை, இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் மேற்கு இந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதுவரை, இலங்கை மாஸ்டர்ஸ் அணி, ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து இந்தியா மாஸ்டர்ஸ் அணி, இரண்டாம் இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கித்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகள், அடுத்த இரண்டு இடங்களையும் பெற்றுள்ளன. இந்த அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
