கடற்படையினரின் அசமந்தப்போக்கை கண்டித்த செல்வராசா கஜேந்திரன் - இடைநடுவே வெளிநடப்பு செய்த பிரதிநதிகள்

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Erimalai Jun 06, 2026 08:08 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த நபர்களின் குறுக்கீடு காரணமாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன், பிரதிநிதிகள் இடைநடுவில் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு கடற்படை தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

மருந்தக பணியாளர் வீட்டில் 3000 போதை மாத்திரை - சோதனையில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

மருந்தக பணியாளர் வீட்டில் 3000 போதை மாத்திரை - சோதனையில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்

அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களை தேடும் நடவடிக்கையில் முன்னேற்ற நிலையினை எட்டியிருக்க முடியும் என பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதே மேற்குறித்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்படையினரின் அசமந்தப்போக்கை கண்டித்த செல்வராசா கஜேந்திரன் - இடைநடுவே வெளிநடப்பு செய்த பிரதிநதிகள் | Selvarasa Condemns The Navy S Reckless Behavior

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங் கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் நேற்று(05.06.2026) 2.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி

இந்தக் கூட்டத்தில், பருத்தித்துறை நகர பிதா வின்சன்ட் டீ போல். டக்ளஸ்போல், வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் நா.பத்மநாதன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உ.யுகதீஸ், உப தவிசாளர் சிறீகாந்தன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பருத்தித்துறை, வல் வெட்டித்துறை நகர சபைகள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்ப வற்றின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடற்படையினரின் அசமந்தப்போக்கை கண்டித்த செல்வராசா கஜேந்திரன் - இடைநடுவே வெளிநடப்பு செய்த பிரதிநதிகள் | Selvarasa Condemns The Navy S Reckless Behavior

வடமராட்சி கடலில் மீன்பிடி நடவடிக்கையின் போது காணாமல் போயிருந்த நான்கு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணியில் கடற்படையினரது பங்குபற்றுதல் தொடர்பில் பருத்தித்துறை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி விளக்கமளித்திருந்தார்.

கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்பட்டமை தேடுதல் நடவடிக்கையின் போது சவாலாக இருந்தது என அவர் கூறியிருந்தார்.

மறுப்பு தெரிவித்த செல்வராசா கஜேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கருத்தை மறுத்து பதிலளித்திருந்தார்.

எமது கடற்றொழிலாளர்கள் சாதாரண படகில் சென்று இந்த கடற்கொந்தளிப்புக்கு மத்தியில் தேடுதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் எமது மக்களுக்கு ஒரு நெருக்கடி வரும் போது கடற்படையால் உரிய முறையில் செயற்பட முடியாதென்றால் அவர்கள் எங்கள் மண்ணில் இருப்பதில் அர்த்தமில்லை.

ஏற்கனவே இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட காரணங்களினால் எங்கள் கடல் வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடற்படையினரின் அசமந்தப்போக்கை கண்டித்த செல்வராசா கஜேந்திரன் - இடைநடுவே வெளிநடப்பு செய்த பிரதிநதிகள் | Selvarasa Condemns The Navy S Reckless Behavior

இவ்வாறான நிலையில் சுடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபடவில்லை. அவர்கள் தேடியதை தாம் கண்ணால் காணவில்லை என தேடுதலில் ஈடுபட்ட உள்ளுார் கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர். ஆனால் கடற்படை தேடியது என இங்கு சொல்லப்படுவது. இந்த நிலை மிக வேதனையானது.

உடனடியாக கடற்படை செயற்பட்டிருந்தால் அவர்களை கண்டுபிடித் திருக்கலாம் என்றார். இதே கருத்தை அப்பகுதி கடற்றொழிலாளர்களும் தெரிவித்ததாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெ.ரஜீவன் ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதிநிதிகள் வெளிநடப்பு

இதன்போது, கடற்றொழில் அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளர் குறுக்கிட்டு கடற்படையினர் மீதான குற்றச் சாட்டை மறுத்திருந்தார்.

அதற்கு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், முதல் நாளில் இருந்து நடந்தவற்றை கூற முற்பட்ட போது, அனுமதி பெறாத ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர் குறுக்கீடு செய்திருந்தார்.

நாட்டில் இன்றும் கன மழை..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில் இன்றும் கன மழை..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

அதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரதேச செயலாளரது தலையீட்டில் நிகழ்வுகளை தொடர்ந்து யாரும் பதிவு செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்தும் கடற்படையினர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பங்கேற்றிருந்த பிரதிநிதிகள் ஏனையவர்களை பேசவிடாது குறுக்கீட்டினை மேற்கொண்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரது பிரதிநிதிகளாக பங்கேற்றிருந்த செ.கஜேந்திரன், கு.தினேஸ் ஆகியோர் இடைநடுவே வெளிநடப்பு செய்துள்ளனர்.   

தீப்பற்றியவுடன் தப்பியோடிய ஊழியர்கள்.. ஹொரணை முதியோர் இல்லத்தில் நடந்த மனிதாபிமானமற்ற செயல்கள்

தீப்பற்றியவுடன் தப்பியோடிய ஊழியர்கள்.. ஹொரணை முதியோர் இல்லத்தில் நடந்த மனிதாபிமானமற்ற செயல்கள்

மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US