இன முரண்பாட்டை ஏற்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள்: மு.சந்திரகுமார் கண்டனம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது பொலிஸார் நடந்துகொண்ட
விதம் மிகவும் கண்டனத்திற்குரியது என முன்னாள் நாடாளுமன்ற சமத்துவக்
கட்சியின் பொதுச் செயலாளரமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் தமிழர் - சிங்களவர் என்ற மனநிலையிலேயே காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் முன்னிலையில் தாக்குதல்
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், செல்வராசா கஜேந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அவர் இந்த நாட்டின் ஒர் உயர்ந்த சபையின் உறுப்பினர் அவரை தெருவில் ஒன்று கூடிய சில ரௌடிகள் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரின் முன்னிலையில் தாக்குவது என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.
தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை எப்படியிருக்கும்? வன்முறைகளை தடுத்து சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பொலிஸார் அந்த இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருந்தது என்பது தமிழ் மக்கள் விடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அப்பட்டமாக காட்டி நிற்கிறது.

பொலிஸாரின் முன்னிலையில் கஜேந்திரன் மீதான தாக்குதல்: சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்திகளின் தொகுப்பு (Video)
இதுதான் இந்த நாட்டின் நிலைமை, தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் என்பது ஒரு நல்ல உதாரணம் எனத் தெரிவித்த அவர் நினைவேந்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேற்கொள்ளவிடாது வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதி ஒருவரை வீதியில் விரட்டி விரட்டி தாக்குபவர்கள் மீதும் அந்த தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்தாது நின்ற பொலிஸார் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 6 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
