ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார.
அக்கட்சியின் ஊடகப்
பேச்சாளர் சுரேன் குருசாமி இதனை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கம்
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11 ஆவது தேசிய மாநாடு நாளை (24.03.2024) வவுனியா மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதையொட்டி கட்சியின் முக்கிய பதவிநிலைகள், தலைமைக்குழு, நிர்வாக குழு, மத்திய குழு என்பவற்றுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது.
வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இருந்தும் பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைக்கான குழுக்களையும் பதவி நிலைகளையும் தெரிவு செய்துள்ளனர்.
மிகவும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், கட்சியினுடைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த தெரிவு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் தலைவராக தொடர்ந்தும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், செயலாளர் நாயகமாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), தேசிய அமைப்பாளராக பிரசன்னா இந்திரகுமார், உப தலைவராக ஹென்றி மகேந்திரன், நிதிச் செயலாளராக சுரேன் குருசாமி, நிர்வாக செயலாளராக விந்தன் கனகரத்தினம், செயலாளராக செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்காலத்தில் கட்சியின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பார்கள் "என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
