தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த அடைக்கலநாதன்

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Selvam Adaikkalanathan Sri Lanka Politician
By Thileepan Dec 15, 2024 06:07 PM GMT
Report

தமிழரசுக் கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்ற செயல். தேர்தல் வெற்றிகளை வைத்து தீர்வு விடயத்தை பார்க்க முடியாது என்பது சுமந்திரனுக்கும் தெரியும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தமிழர்களை பொறுத்த வரை பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே, இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவிற்கு ஆதரவாக மற்றக் கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை.

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

தீர்வுத் திட்டம் 

ஒன்றாக இணைந்து ஒரு மேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போதே அது வலுவானதாகவும், பலமானதாகவும் இருக்கும். அதன் மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையினை முன்வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்ய முடியும்.

தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த அடைக்கலநாதன் | Selvam Adaikkalanadhan Replied To Sumanthiran

தமிழரசுக் கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்து வர வேண்டும் என்று சொல்வது முறையற்ற செயல். தேர்தல் வெற்றிகளை வைத்து இதனை பார்க்க முடியாது.

ஒற்றுமையான தீர்வு திட்டத்தை முன்வைக்கின்ற போதே எமது மக்களும் அதை விரும்புவார்கள். அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமது பக்கம் திருப்ப முடியும். தனித்தனியாக செயற்பட்டால் அதை வைத்து அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

சுமந்திரனின் கருத்து 

பிரிந்து சென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம். எனவே நாங்கள் செய்வோம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியமற்ற ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சுமந்திரனுக்கும் இது நன்றாக தெரியும்.

தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த அடைக்கலநாதன் | Selvam Adaikkalanadhan Replied To Sumanthiran

அவரும் ஒத்துவருவார் என்று நினைக்கிறேன். தமிழரசுக் கட்சியும் ஒத்துவரும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். அதேவேளை, அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சி தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்துள்ளது. சில வரைபுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, மற்றவர்கள் எமது நிலைப்பாட்டோடு இணைந்து செயற்ப்பட முன்வந்தால், அதில் எந்த ஆட்சேபனையும் இருக்கப் போவதில்லை. நாம் தமிழர்களின் பிரதான கட்சி.

இந்த தேர்தலில் வடக்கு - கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் ஆசனங்களை பெற்ற ஒரேயொரு கட்சி. ஆகவே எமது திட்டத்திற்கு ஏனைய தேசிய கட்சிகள் வர வேண்டும் என்று எம்.எ. சுமந்திரன் கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இன்னொரு மொழியைக் கற்பது அவசியம் : வலியுறுத்தும் வடக்கு ஆளுநர்

இன்னொரு மொழியைக் கற்பது அவசியம் : வலியுறுத்தும் வடக்கு ஆளுநர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US