இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி
இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் (01) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முக்கிய விடயங்கள்
குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மாந்தை மேற்கு பிரதே சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், மன்னார் நகர சபை உறுப்பினர் செபமாலை ஆரோக்கியநாதன் பிகிறாடோ, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறையில் கப்பல் கட்டுவதற்கு சிறிய நிலையம் ஒன்றை அமைத்தல், மன்னாரில் நவீன முறையில் விளையாட்டு மைதானம் அமைத்தல், மாந்தை மேற்கில் உள்ளக விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்தல், மன்னார் பிரதேச சபை பிரிவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தேவையான உதவிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோளை இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி ஏற்றுக் கொண்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
