தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்ல பொது வேட்பாளர் நாடகம் : கஜேந்திரன் காட்டம்
ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அக் கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் இனம் சார்ந்த கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்பது கண்டிக்கத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாக காணப்படுகிறது. தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயக படுகொலையையே நிகழ்த்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,