இலங்கையில் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனையாகும் முக்கிய நிறுவனம்
கெரவலப்பிட்டிய டீசல் மின்சார நிலையத்தில், தாம் கொண்டிருக்கும் 51 சதவீத பெரும்பான்மை பங்குகளை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு விற்பனை செய்ய நிதி அமைச்சு, அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
கொழும்பின் ஊடகம் ஒன்று இதனை நம்பத்தகுந்த தரப்புக்களைக் கோடிட்டுத் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் துணை நிறுவனமான லங்கா டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் லிமிடெட் நிறுவனம், கெரவலப்பிட்டிய வெஸ்ட் கோஸ்ட் பவர் "யுகதன்வி" டீசல் ஆலையை நடத்தி வருகிறது. இதில் ஊழியர் சேமலாப நிதியம் (ஈபிஎஃப்) 23.9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
இந்த பங்குகளை அமெரிக்க நிறுவனமான "நியூ போர்டீஸ் எனர்ஜி"(New fortees energy) நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை ஈபிஎஃப் நிதிச்சபை நிராகரித்து விட்டது. இதனையடுத்தே திறைசேரிக்கு சொந்தமான 51% பங்குகளை விற்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
"யுகதன்வி" மின் உற்பத்தி நிலையத்தில், திறைசேரி 51%, இபிஎஃப் (EPF)23.9%, லங்கா மின்மாற்றிகள் 18%, லங்கா மின்சார நிறுவனம் 7.1%.பங்குகளைக் கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
