கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றோரின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியீடு
கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. மேலதிகமாக வாக்கெண்ணும் பணிக்காக பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் 8 நிலையங்களில் நடைபெறவிருக்கின்றன.
நாளை முதல் நடைபெறவிருக்கின்ற தபால்மூல வாக்களிப்பிற்காக 3656 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தவிர்க்க முடியாத காரணம்
அந்த வகையில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் நாளையும், பொலிஸார் 4ஆம் மற்றும் 6ஆம் திகதிகளிலும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக 5ஆம், 6ஆம் திகதிகளிலும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தியோகத்தர்கள், 11ஆம், 12ஆம் திகதிகளில் பழைய மாவட்டச் செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.
அதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும். இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துங்கள். அத்துடன், தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
